எம்.ஜி.ஆர் ரீமேக் பாடலுடன் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

எம்.ஜி.ஆர் ரீமேக் பாடலுடன் ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பெரிய ஹிட்டானதையடுத்து, இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை தலைப்பாக வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வரும் வேளையில், இப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்யப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. 

இந்த பாடலை படத்தில் ஜி.வி.யின் அறிமுகமாக பாடலாக வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். இந்த பாடலை ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற நடன அரங்கு போன்று பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் சென்னை ஏரியா பையனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இப்படம் உருவாகவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions