படப்பிடிப்புக்கு ஆட்டோவில் வந்த ஜி.வி!

Bookmark and Share

படப்பிடிப்புக்கு ஆட்டோவில் வந்த ஜி.வி!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி நடிக்க, சாம் ஆண்டன் இயக்கி வரும் புதிய படம் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு.’ ‘டார்லிங்’ வெற்றிக்கு பிறகு சாம் ஆண்டனும், ஜி.வியும் இணையும் இரண்டாவது படம்.

அதேபோல், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு ஆனந்தியுடன் ஜி.வி. இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோரின் ஆசி பெற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சமாக இது உருவாகி வருகிறது. அதேநேரத்தில் இப்படத்தில் சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகிறது.

முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் சண்டை காட்சியில் எல்லாம் நடித்து அசத்தியிருக்கிறார். சமீபத்தில் வில்லன் நடிகர்கள் மன்சூர் அலிகான், பொன்னம்பலம், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சண்டை போடும் சுவாரசியமான சண்டைக் காட்சி மோகன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. 

இதற்காக பெரும் பொருட் செலவில் செட் அமைத்து படமாக்கியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் இந்த சண்டைக்காட்சியை அமைத்துள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இடைவிடாது நடத்தியுள்ளனர். 

ஒருநாள் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த ஜி.வி.பிரகாஷ், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாராம். படப்பிடிப்புக்கு காலம் தாழ்த்தி செல்லக்கூடாது என்று காரில் இருந்து இறங்கி, அருகில் ஒரு ஆட்டோவை பிடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். இது படக்குழுவினர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்ததாம்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions