வருட கடைசியில் உருக்கத்துடன் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள கடிதம்!

Bookmark and Share

வருட கடைசியில் உருக்கத்துடன் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள கடிதம்!

ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராகவும் சரி இசையமைப்பாளராகவும் சரி இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதைதொடர்ந்து அவர் பத்திரிகைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம்.

நான் இசையமைப்பாளராகவும் பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இசையமைப்பாளராக எனக்கு பேராதரவு அளித்து வந்த நீங்கள் நான் நடிகனாக மாற புதிய முயற்சிமேற்கொண்டதற்க்கு நீங்கள் அளித்த ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் எனக்கு ஊன்று கோளாய் இருந்து வந்துள்ளது.

தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “புருஸ் லீ” பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் “அடங்காதே”, திருக்குமரன் எண்டர்டெயின்மேண்ட் தயாரிப்பில் வெங்கட் பக்கர் இயக்கத்தில் “4G”, பிரபல ஓளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சசி இயக்கத்தில் உருவாகும் படம், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் படம், ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறேன்.

 எனது இசைக்கும் நடிப்பாற்றலுக்கும் தாங்கள் அளித்து வரும் எல்லையற்ற அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions