ஜி.வி.பிரகாஷை ட்விட்டரில் கலாய்த்த ஆர்யா

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷை ட்விட்டரில் கலாய்த்த ஆர்யா

சக நட்சத்திரங்களிடம் வாடா போடா நட்பு பாராட்டும் அளவுக்கு ரியல் நண்பேண்டாவாக இருப்பவர் ஆர்யாதான். அவர்களுக்காக தன்னால் இயன்ற உதவிகளையும் செய்யத்தவறியதில்லை.

அவருடைய நண்பர்களான ஜீவாவின் மார்க்கெட் டல்லடித்த நேரத்தில் சிவா மனசுல சக்தி படத்தில் இலவசமாக கெஸ்ட்ரோலில் நடித்துக் கொடுத்தார். சமீபத்தில் கூட விக்ராந்த் நடிக்கும் தாக்க தாக்க என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார்.

அதையடுத்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து வரும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்திலும் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார் ஆர்யா. கெஸ்ட்ரோலில் நடித்தது மட்டுமல்ல, த்ரிஷா இல்லனா நயன்தாரா படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று சற்று நேரம் வேடிக்கையும் பார்த்திருக்கிறார் ஆர்யா.

அவர் அங்குபோனபோது, பிட் படம் டி... பாடலுக்காக ஜி.வி.பிரகாஷ் நடனம் ஆடி இருக்கிறார். அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து வியந்துபோயிருக்கிறார் ஆர்யா.     இதுகுறித்து, த்ரிஷா இல்லனா நயன்தாராவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது செம அனுபவம். பிட் படம் டி... பாடலுக்கு ஜி.வி. மாமாவின் டான்ஸ் செம செம... பிச்சு பெடல் எடுத்துட்டான்! என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் ஆர்யா.

இன்னொரு ட்வீட்டில், த்ரிஷா இல்லனா நயன்தாரா செட்டில் ஆனந்தியுடன் ஜி.வி. கடலை போட்டதை கண்டுபிடிச்சுட்டேன். என்னையே மிஞ்சிட்டாரே!   என்றும் ஜி.வி.பிரகாஷை கலாய்த்திருக்கிறார் ஆர்யா. சைந்தவி காதில விழுந்தால் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதை கந்தல்தான்...பத்த வச்சுட்டியே பரட்டை...!


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions