தனுஷைக் காப்பியடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார்?

Bookmark and Share

தனுஷைக் காப்பியடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார்?

தனுஷின் ஆரம்ப காலப் படங்கள் மிகவும் விளையாட்டாகவே இருக்கும். காதலைத் தவிர அந்தப் படங்களில் வேறொன்றும் பெரிதாக இருக்காது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழாகவே தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்கள் இருக்கும்படி அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் படங்களை ரசிக்கும் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்துதான் இன்று ஒரு உச்ச நிலையில் இருக்கிறார் தனுஷ். 

அவருடைய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி” படங்கள் வரை நடுத்தரக் குடும்பத்துப் பையனாகவோ, அல்லது ஏழைப் பையனாகவே மட்டுமே நடித்து பி அன்ட் சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் தனுஷ். அதன் பின்தான் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டார்.

இப்போது இன்னுமொரு தனுஷாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் கதாபாத்திரத்தை டிரைலரில் பார்த்தாலே என்ன மாதிரியானது என்று புரிந்து கொள்ளலாம். இந்தப் படங்கள் எல்லாம் அப்படியே ஆரம்ப கால தனுஷையே நினைவுபடுத்துகின்றன என்றால் அது மிகையில்லை.

தனுஷுக்கும், ஜி.விக்கும் இடையில் உருவான சண்டைக்குக் கூட இதுவும் ஒரு பின்னணி காரணமாக இருக்குமோ?


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions