எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள்  உள்ளன. இந்நிலையில் மேலும் பல்வேறு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `புரூஸ் லீ' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர்  ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘செம’, ‘குப்பத்துராஜா’, ‘4ஜி’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

மேலும் ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்', சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன்  இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீமான் இயக்கத்தில் `பகலவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வாறு பிசியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், எழில் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எக்கடிக்கிபோத்தாவு சின்னவாடா’. தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோ‌ஷன் பிச்சர்ஸ் சார்பில் மதன் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
என்னது இவர் தான் லிட்டில் தளபதி விஜய்யா? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை இயக்க ஆசைப்படும் பாண்டிராஜ்
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions