இரு விதமான வெற்றி... ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி...!

Bookmark and Share

இரு விதமான வெற்றி... ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி...!

2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் நல்ல லாபத்தைக் கொடுத்த படமாக 'டார்லிங்' படம் விளங்கியது. அந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமானார்.

அந்தப் படத்துடன் வெளிவந்த 'ஐ, ஆம்பள' ஆகிய படங்களுடன் போட்டி போட்டாலும் படத்தை வாங்கிய அனைவருக்குமே 'டார்லிங்' படம் லாபத்தைத் தந்ததாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

ஒரு அறிமுக நடிகராக அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் வெற்றி பெற்றார். இப்போது 'கொம்பன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'கருப்பு நிறத்தழகி..., கம்பி கரை வேட்டி...' ஆகிய பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் ஜிவிக்கு அதிகமான பாராட்டுக்கள் பெற்றுத் தந்துள்ளன.

இது குறித்து இன்று காலை நடந்த 'கொம்பன்' சக்சஸ் மீட்டில் ஜிவி பேசியதாவது, “டார்லிங் படமாகட்டும், கொம்பன் படமாகட்டும் இந்த வருஷத்தை எனக்கு பாசிட்டிவ்வா அமைச்சிக் கொடுத்திருக்கு.

'ஆடுகளம்' படத்துக்கப்புறமா ஒரு கிராமிய மணம் வீசுற படம் எனக்கு அமையல. இயக்குனர் முத்தையா இந்தப் படத்துக்கு நான் இசையமைக்கணும்னு கேட்டுக்கிட்டாரு. முதல்ல இந்தப் படத்துக்காக நான் ஒரு பாடல் மட்டும்தான் பண்றதா இருந்தது.

அப்புறம் படத்தோட அனைத்துப் பாடல்கள், பின்னணி இசையையும் நானே பண்ணினேன். மீடியாக்களுக்கு நன்றி சொல்லணும். பொதுவா நான் ஒரு படம் ரீலீசான யாருக்கும் போன் பண்ணி, கேக்க மாட்டேன்.

ஒரு படம் நல்லா இருந்தால் மத்தவங்களே போன் பண்ணி சொல்வாங்கன்கற நம்பிக்கை எனக்கு. டார்லிங் படத்துக்கும், இப்ப கொம்பன் படத்துக்கும் எனக்கு நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. இப்படி ஒரு வெற்றிப் படத்துல நானும் இருக்கிறதுக்குக் காரணமான 'கொம்பன்' குழுவினருக்கு என் நன்றி என ஜிவி பேசினார்.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions