ஜி.வி.பிரகாசும் இறங்கி அடிக்கிறார்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாசும் இறங்கி அடிக்கிறார்!

வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தோடு அரை சதமடிக்கிறார். மேலும், இதுவரை தனது இசையில் ஒரு குவாலிட்டியை மெயின்டெய்ன் பண்ணி வருகிறார். லோக்கலான கதைகள் என்றாலும்கூட அவர் இறங்கி அடித்ததில்லை. டீசன்டாகவே பாடல்களை கொடுத்து வருகிறார்.

இருப்பினும், சமீபகாலமாக டங்காமாரி போன்ற சென்னை தமிழில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருவதால், ஜி.வி.பிரகாசும், தனது 50வது படத்தில் தற்போதைய ரசனைக்கேற்ப இறங்கி அடிக்க தயாராகி விட்டார்.

அதாவது, இதற்கு முன்பு விஜய் நடித்த தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய்யின் குரலில் குத்துப்பாட்டையும் ஒரு மெலோடியாக பதிவு செய்த ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு புதிய பாணியை உருவாக்கப்போகிறாராம்.

அதாவது, விஜய் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவிருக்கும் இந்த படத்தில் உலக தரத்தில் ஒரு லோக்கல் பாடல் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இன்றைய டங்காமாரி, டண்டனக்கா பாடல்களை மிஞ்சும் அதிரடி டியூனில் இப்பாடல் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions