ஜி.வி.பிரகாஷை இயக்கும் சந்தானம் இயக்குனர்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷை இயக்கும் சந்தானம் இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இவருடைய நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புருஸ்லீ’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும், சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படம்,  ராஜீவ் மேனன் இயக்கும் படம், புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் அடங்காதே என்ற படம் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில், தற்போது ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரையில் ‘லொள்ளு சபா’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராம்பாலா. இவருடைய இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாம் படமாக வளர்ந்து வரும் நடிகரான ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். தற்போது இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க முன்னணி நாயகி ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்தின் சார்பில் ஸ்டீபன் என்பவர் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions