ஜி.வி.பிரகாஷின் ஹோம்ஒர்க்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் ஹோம்ஒர்க்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த முதல் படம் பென்சில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்தார். பள்ளி பசங்களைப்பற்றிய கதையில் உருவான அப்படம் இப்போதுவரை வெளியாகவில்லை. அதுபற்றி விசாரித்தால், எதுவும் சொல்ல மறுக்கிறார்கள்.

ஆனால், அதையடுத்து அவர் நாயகனாக நடித்த டார்லிங் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அப்படம் வெற்றியும் பெற்றது. ஆனால், அப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு பேசப்படவில்லை.

அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும் என்று தான் விமர்சனங்கள் வெளியாகின.அதனால், தனது 3வது படமான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தனக்குள் இருக்கும் நடிகனை நூறு சதவிகிதம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தின் ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொண்டு தீவிரமான ரிகர்சல் எடுத்த பின்னரே கேமரா முன்பு வந்து நின்றாராம்.

அப்படி அவர் நடித்த பல காட்சிகளுக்கு ஸ்பாட்டிலேயே கைதட்டல் கிடைத்ததாம். அதனால் அடுத்தடுத்த காட்சிகளில் புதிய எனர்ஜியுடன் நடித்தாராம் ஜி.வி.பிரகாஷ். இந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தின் டீசர் வெளியானதை அடுத்து அவரது நடிப்பு பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில முன்னணி ஹீரோக்களே முதல் படத்தை விட இந்த படத்தில் நீங்கள் கடினமாக உழைத்திருப்பது டீசரிலேயே தெரிகிறது என்று சொல்லி அவரை தட்டிக்கொடுத்து வருகிறார்களாம். அதனால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions