ஜி.வி.பிரகாஷ் படத்தில் ப்ரியா ஆனந்த்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தில் ப்ரியா ஆனந்த்

‘டார்லிங்’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா ஜித் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் தலைப்பே அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. மேலும், இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சிம்ரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ப்ரியா ஆனந்தும் இந்த படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ப்ரியா ஆனந்த் நடித்தது குறித்து இயக்குனர் கூறும்போது, ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் மேலும் ஒரு ஆச்சர்யத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழகிய நடிப்பை வெளிக்கொண்டு வரும் நாயகி வேண்டும் என்று எண்ணினோம். ப்ரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். தனக்கே உண்டான உற்சாகத்தாலும், குதூகலத்தாலும் மொத்த படக்குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார் என்று கூறினார். 

இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நல்ல கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வருகிற ஜுன் 4-ந் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியாகிறது.

 


Post your comment

Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions