நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகராக ஒருபக்கம் நடித்து வந்தாலும் மறுபக்கம் தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் பழம்பெரும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் ரீமிக்ஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்...’ என்ற பாடலைத்தான் ஜி.வி.பிரகாஷ் ரீமிக்ஸ் செய்யவுள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இரவினில் ஆட்டம்’ பாடலை நான் ரீமிக்ஸ் செய்யப்போகிறேன். இந்த பாடலை பற்றி நான் இப்போதைக்கு எதுவும் வெளியில் சொல்லமுடியாது. கண்டிப்பாக இந்த பாடல் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும் என்றார். 

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions