முத்த காட்சிக்கு 36 டேக்கா?: இயக்குனரை மாட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

முத்த காட்சிக்கு 36 டேக்கா?: இயக்குனரை மாட்டிவிட்ட ஜி.வி.பிரகாஷ்

‘டார்லிங்’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக மனிஷா யாதவ், ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ப்ரியா ஆனந்தும் நடிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு வருகை தந்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷிடம், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சிக்காக 36 டேக்குகள் வாங்கியதாக வெளிவந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, படத்தில் இடம்பெற்ற அந்த முத்தக்காட்சிக்கு நான் பொறுப்பில்லை. முழுக்க முழுக்க இயக்குனர்தான் பொறுப்பு. மேலும், அந்த முத்தக்காட்சிக்கு மட்டும் நான் அத்தனை டேக்குகள் வாங்கவில்லை. அதனுடன் இணைத்து சில காட்சிகள் வரும். எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் அத்தனை டேக்குகள் ஆனது என்று கூறினார். 


Post your comment





Related News
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions