மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் த்ரிஷா இல்லனா நயன்தாரா கூட்டணி!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றிநடை போட்ட படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை சிம்ரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இளைஞர்களை மிகவும் கவர்ந்த இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு சிம்புவை வைத்து புதிய படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 

அதன்படி, சிம்புவை 3 கெட்டப்புகளில் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படம் முடிந்தபிறகு, ஜி.வி.பிரகாஷுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் ஆதிக். 

இப்படமும் இளைஞர்களை கவரும் வகையில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால், இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என கூறலாம்.


Post your comment





Related News
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions