ஜி.வி.பிரகாஷ் படத்தை வெளியிட தடை – பிரபல அமைப்பு கடும் எதிர்ப்பு!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தை வெளியிட தடை – பிரபல அமைப்பு கடும் எதிர்ப்பு!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த நவம்பர் 10-ம் தேதியே வெளியாவதாக இருந்தது. ஆனால் ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக தற்போது இதன் ரிலீஸ் தேதி நவம்பர் 18-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு எதிராக தமிழ்நாடு ஏழை, எளிய மக்கள் நல அமைப்பின் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ” பல கட்சிகள் இருந்தாலும் எந்த கட்சி முதலில் பணம் கொடுக்கிறதோ அந்த கட்சிக்குதான் முதல் ஓட்டு, இதுவே தமிழர்களின் கலாச்சாரம்” என ஒரு வசனம் இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இது தமிழர்களை அவமதிப்பதாகவும் எனவே இந்த படத்தை வெளியிடக்கூடாது எனவும் அந்த அமைப்பு புகார் கொடுத்துள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions