ஹைக்கூ படப்பிடிப்பை முடித்த பாண்டிராஜ்!

Bookmark and Share

ஹைக்கூ படப்பிடிப்பை முடித்த பாண்டிராஜ்!

பாண்டிராஜ் முதன்முதலாக இயக்கிய படம் பசங்க. இந்த படத்தில்தான் விமல் நாயகனாக நடித்தார். அதேபோல் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில்தான் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார்.

அப்படி தான் ஹீரோவாக அறிமுகம் செய்த விமல்-சிவகார்த்திகேயனை வைத்து பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தை இயக்கினார் பாண்டிராஜ்.

ஆனால், அதற்கடுத்து அவர் கால்சீட் கேட்டாலும் கொடுப்பதற்கு விமல்-சிவகார்த்திகேயன் இருவருமே தயாராக இருந்தபோதும், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இது நம்ம ஆளு படத்தை சிம்புவை வைத்து ஆரம்பித்தார் பாண்டிராஜ். அதோடு, அந்த படத்திற்கு ஒரு பரபரப்பை கூட்ட வேண்டும் என்று மீண்டும் சிம்புவுடன் நயன்தாராவை நடிக்க வைத்தார்.

இருப்பினும், அந்த படம் வருடக்கணக்கில் இழுத்தடித்துக்கொண்டு வந்தது. அதனால்தான், அந்த கேப்பில் ஹைக்கூ என்ற படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். அப்படத்தில் பிந்துமாதவி முக்கிய ரோலில் நடிக்க, படத்தை தயாரிக்கும் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடந்து வந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாம். அதனால் விரைவில் வெளியாகயிருக்கும் சூர்யாவின் மாஸ் படத்தோடு ஹைகூவின் ட்ரைலரையும் வெளியிடும் பாண்டிராஜ், இது நம்ம ஆளு படத்திற்கு முன்பே இந்த படத்தை வெளியிட்டு விடுவார் என்று தெரிகிறது


Post your comment





Related News
பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!
வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!
வரிவிலக்காக ஹைக்கூ பெயர் மாற்றம்
ஹைக்கூவுக்காக சில நாட்களை ஒதுக்க சூர்யா திட்டம்
விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!
மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா
பாண்டிராஜின் \'ஹைக்கூ\' விரைவில் ரிலீஸ்...!
ஹைக்கூ: முதல் முன்னோட்டம்
ஹைக்கூ படத்திற்காக 1500 பள்ளி மாணவ மாணவிகளை நடிக்க வைத்த பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions