ஹைக்கூவுக்காக சில நாட்களை ஒதுக்க சூர்யா திட்டம்

Bookmark and Share

ஹைக்கூவுக்காக சில நாட்களை ஒதுக்க சூர்யா திட்டம்

இது நம்ம ஆளு படம் பிரச்சனையானதால் அதை அப்படியே போட்டுவிட்டு ஹைக்கூ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் பாண்டிராஜ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஹைக்கூ படத்தினை 36 வயதினிலே படத்தைத் தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் மகன் கவின் முக்கிய வேடத்தில் நடிக்க, நயனா, அபிமான் ஆகிய குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
பிந்து மாதவி முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.இவர்களுடன் கெஸ்ட் ரோல்களில் சூர்யா, அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர். பாண்டிராஜ் தன்னுடைய சொந்த ஊரில் ஹைக்கூ படத்தின் படப்பிடிப்பை முடித்த்துடன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் முடித்துவிட்டார்.
அடுத்து விஷாலை வைத்து இயக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். விஷால் படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்துகொண்டிருக்க இன்னொரு புறம் ஹைக்கூ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஏற்பாடுகளில் பரபரப்பாகயிருக்கிறார்.
இயக்குனர் பாண்டிராஜ் இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டின்போதே ஹைக்கூ பட ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளாராம்.  24 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ள சூர்யா, ஹைக்கூ படபுரமோஷனுக்காக சில நாட்களை ஒதுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!
வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!
வரிவிலக்காக ஹைக்கூ பெயர் மாற்றம்
விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!
மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா
பாண்டிராஜின் \'ஹைக்கூ\' விரைவில் ரிலீஸ்...!
ஹைக்கூ படப்பிடிப்பை முடித்த பாண்டிராஜ்!
ஹைக்கூ: முதல் முன்னோட்டம்
ஹைக்கூ படத்திற்காக 1500 பள்ளி மாணவ மாணவிகளை நடிக்க வைத்த பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions