மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!

Bookmark and Share

மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!

விமல்-சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு கோலிசோடா படத்திற்கு வசனம் எழுதிய பாண்டிராஜ், சிம்பு-நயன்தாராவை ஜோடி சேர்த்து இது நம்ம ஆளு படத்தை தொடங்கினார்.

ஆனால் அவரது முந்தைய படங்களெல்லாம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்து தியேட்டருக்கு வந்தபோதும் இந்த படம் வழக்கமான சிம்பு படங்களைப்போன்று பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கிடக்கிறது.

அதனால், அந்த கேப்பில் சூர்யா தயாரிப்பில் ஹைக்கூ என்ற படத்தை தொடங்கினார் பாண்டிராஜ். பிந்துமாதவி மற்றும் சில சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அப்படத்தில் சூர்யா, அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள்.

அதாவது காக்கா முட்டை படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்தது மாதிரி. தற்போது அப்படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டது. க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு மும்பையில் முகாமிட்டிருக்கிறது ஹைக்கூ படக்குழு.

சில நாட்கள் படமாக்கப்பட்டதும் பூசணிக்காய் உடைத்து விடுவார்களாம். அதையடுத்து இறுதிகட்ட பணிகள் ஒரு பக்கம் நடக்க, விஷால் நடிக்கும் படத்தையும் ஆரம்பிக்கிறாராம் பாண்டிராஜ். தற்போது அப்படத்திற்கான கதாநாயகி தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions