ஹைக்கூ படத்திற்காக 1500 பள்ளி மாணவ மாணவிகளை நடிக்க வைத்த பாண்டிராஜ்

Bookmark and Share

ஹைக்கூ படத்திற்காக 1500 பள்ளி மாணவ மாணவிகளை நடிக்க வைத்த பாண்டிராஜ்

குழந்தைகள் படம் இயக்குவதில் பாண்டிராஜ் எப்போதுமே எக்ஸ்பர்ட்தான். அவர் இயக்கிய பசங்க, மெரீனா படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, அவர் இயக்கி வரும் படம்தான் ஹைக்கூ, இதில் அமலா பால் ஹீரோயின்.

சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன் படத்தில் வருவது மாதிரியான பள்ளி மாணவர்களின் மராத்தான் போட்டி. இதனை ராமநாதபுரத்தில் படமாக்கினார் பாண்டிராஜ்.

அங்குள்ள செட்டியார் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 1500 மாணவர்களை சூர்யாவுடன் நடிக்க வைத்து கிளமாக்ஸ் காட்சியை படமாக்கினார். படிப்பிடிப்பின் முடிவில் அத்தனை மாணவர்களுக்கும் சூர்யா சார்பில் பிரமாண்ட விருந்து கொடுக்கப்பட்டது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions