காமெடி படத்தில் ஹம்சவர்தன்

Bookmark and Share

காமெடி படத்தில் ஹம்சவர்தன்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‘மந்திரன்’, ‘புன்மானசீக காதல்’, ‘பிறகு’ படங்களில் ஹீரோவாக நடித்தார்னகை தேசம்’, ‘. இப்போது தனது, லேசி பாய்ஸ் ஸ்டூடியோ சார்பில் படம் தயாரித்து நடிக்கிறார்.

இதுபற்றி ஹம்சவர்தன் கூறியதாவது:வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க நினைத்திருந்தேன். இதற்காக உடல் எடையை குறைத்தேன். படத்தின் பட்ஜெட் 20 கோடியை தாண்டும் என்பதால் இப்போது அந்தத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்.

சில படங்களில் நடித்து விட்டு, பிறகு வரலாற்றுப் படத்தில் நடிக்கலாம் என நினைக்கிறேன். இப்போது காமெடி படம் ஒன்றை நடித்து தயாரிக்கிறேன். பல கதைகளைக் கேட்டுள்ளேன். இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். இறுதி முடிவு எடுக்க வில்லை.

இந்த மாதம் வரை இன்னும் சில கதைகளை கேட்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக் கிறது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்களை விரைவில் அறிவிப்பேன்.இவ்வாறு ஹம்சவர்தன் கூறினார். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions