ஹன்சிகாவைப் புகழும் உயிரே உயிரே படக்குழு!

Bookmark and Share

ஹன்சிகாவைப் புகழும் உயிரே உயிரே படக்குழு!

ஜெயப்பிரதாவின் தயாரிப்பில் உருவாகும் படம் உயிரே உயிரே, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். படப்பிடிபில் ஹன்சிகா கொடுத்த ஒத்துழைப்பைப் பார்த்து படக்குழுவே வியந்து பாராட்டுகிறார்களாம்.

படத்தில் நடிக்கும் நாயகன் சித்து ஒரு புதுமுகம், எனவே காட்சிகளில் குறிப்பாக காதல் காட்சிகளில் நடிக்கும் போது ரொம்பவே கூச்சப் பட்டாராம். இதனால் காட்சிகளை மறுபடி மறுபடி எடுக்க வேண்டியிருந்தபோது பல முறை ரீடேக் எடுக்க வேண்டியிருந்ததாம். இப்படி பல காட்சிகளை ரீடேக் எடுத்தார்களாம்.

ஒரு காட்சியை பத்து முறை கூட எடுத்தார்களாம் அப்போதும் கூட ஹன்சிகா முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம். இவ்வளவு முறை எடுக்க வேண்டியிருந்ததே என்று இயக்குநர் தரப்பில் சங்கடப்பபட்ட போது இப்படி புதுமுகம் நடிக்கும் போது அவர்களுக்கு இப்படி ஒரு பதற்றம் இருப்பது சகஜம்தான். அதை நான் புரிந்து கொள்கிறேன்.

உதயநிதியும் என்னுடன் நடிக்கும் போது புதுமுகம்தான். அப்போதும் அதை உணர்ந்திருக்கிறேன். ஏன் நானும் ஒரு காலத்தில் புதுமுகம்தானே? எனவே நோ ப்ராப்ளம் " என்றாராம் ஹன்சிகா. இப்படி ஒரு நடிகையா என உயிரே உயிரே படக்குழுவினர் புகழ்கிறார்கள்.


Post your comment





Related News
அரண்மனை 2 படப்பிடிப்பு தொடங்கியது: ஹன்சிகா, திரிஷா பங்கேற்பு
அம்மா இனி வேண்டாம்
ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”!
விஜய்யின் மாரீசன் படப்பிடிப்பில் மூன்று யூனிட் வேலை செய்கிறதாம்!
அஜித்அடுத்தபடஜோடியார்....?
20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் ஸ்ரீதேவி: விஜய், ஹன்சிகாவுடன் நடனம் ஆடினார்
விஜய் படத்தில் நடிப்பது பற்றி சுதீப் சொல்வது என்ன?
கும்பகோணத்தில் மீண்டும் முகாமிட்டுள்ள ரோமியோ ஜூலியட்
\'ஐஸ் பக்கெட் சவாலை\' தவிர வேறு எந்த சவாலையும் ஏற்பேன்: நடிகை \'குத்து\' ரம்யா
ஹன்சிகா வரைந்த ஓவியத்துக்கு ரூ 15 லட்சம் தந்த நண்பர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions