மீண்டும் உதயநிதியுடன் இணையும் ஹன்சிகா!

Bookmark and Share

மீண்டும் உதயநிதியுடன் இணையும் ஹன்சிகா!

உதயநிதி தயாரிப்பாளராக இருந்தபோது நயன்தாராவின் தீவிரமான ரசிகராக இருந்தார். அதனால் தான் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவருடன் நடிக்க ஆசைப்பட்டார்.

ஆனால் அதையடுத்து அவர் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தபோது, பிரபுதேவாவை திருமணம் செயது கொள்ள இருந்த அவர், இனிமேல் நான் நடிப்பதாக இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

அதனால், அதையடுத்து ஹன்சிகாவை அந்த படத்தில் நடிக்க வைத்தார் உதயநிதி. அந்த படமும் ஹிட் அடித்தது. அதனால் அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கும் தன்னை அழைப்பார் என்று ஹன்சிகா எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், பிரபுதேவாவை பிரிந்து மீண்டும் நடிப்பதற்கு நயன்தாரா வந்து விட்டதால், இது கதிர்வேலன் காதல் படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணினார் உதயநிதி. அதையடுத்து நண்பேன்டா படத்திலும் நயன்தாராவை நடிக்க வைத்தவர், பின்னர் கெத்து படத்துக்கு எமி ஜாக்சனை புக் பண்ணினார்.

அதனால் இனிமேல் தன்னை அவர் அழைக்க மாட்டார் எனறுதான் நினைத்திருந்தார் ஹன்சிகா. ஆனால், கெத்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இதயம் முரளி படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ள உதயநிதி, இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவை அழைத்துள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த ஹன்சிகா, தாமதித்தால் வேறு நடிகைகள் புகுந்து விடுவார்கள் என்பதால், அவுட்டோரில் இருந்தவர் ஓடோடி வந்து அக்ரிமென்டில் சைன் போட்டு விட்டு அட்வான்சை வாங்கிச் சென்று விட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions