ஹன்சிபாவுக்கு அதிர்ச்சி!

Bookmark and Share

ஹன்சிபாவுக்கு அதிர்ச்சி!

தமிழில், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் நாயகியாக நடித்தவர் ஹன்சிபா. அந்த படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் கமிட்டாகவில்லை.

அதனால் தாய்மொழியான மலையாளத்துக்கு சென்று விட்ட அவர் அங்கு மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மூத்த மகளாக நடித்தார்.

அந்த படம் மெகா ஹிட்டாகி விடவே இப்போது சில படங்களில் கமிட்டாகி மலையாளத்தில் பிசியாகிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தமிழிலும் படங்களை கைப்பற்ற அவ்வப்போது சென்னைக்கு விசிட் அடிக்கும் ஹன்சிபா, சில மெகா டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.

ஆனால், முன்பை விட இப்போது ஒரு ஹீரோயினிக்குரிய கெட்டப்பில் அவர் இருந்தபோது, அவரை இரண்டாவது ஹீரோயினி அல்லது படம் முழுக்க வரும் தங்கை வேடம், மகள் வேடங்களில் நடிக்கத்தான் கேட்கிறார்களாம்.

இப்படி பலரும் கேட்டதால், அதிர்ச்சியடைந்த ஹன்சிபா, த்ருஷ்யம் படத்தின் தாக்கம் மலையாள சினிமாவை விட தமிழில்தான் அதிகமாக உள்ளது போல் தெரிகிறது. அதனால் அந்த படத்தை முழுசுமாக கோடம்பாக்கத்தினர் மறந்த பிறகுதான் இனி நான் மறுபடியும் இந்த பக்கம் வருவேன் என்று சொல்லிக்கொண்டு கேரளாவுக்கு பறந்து விட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions