என்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினார்கள்: அன்சிபா ஹாசன்

Bookmark and Share

என்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினார்கள்: அன்சிபா ஹாசன்

நடிகை அன்சிபா ஹாசனும் தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து படக்குழுவினர் மிரட்டியதாக தற்போது புகார் கூறியுள்ளார்.

இவர் தமிழில் ‘நாகராஜ சோழன் எம்.எல்.ஏ,’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். ‘பரஞ்சோதி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லால்-மீனாவின் மகளாக நடித்தார். 

அன்சிபா ஹாசன் கூறும்போது, ‘‘நான் தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். இதற்காக வாய்ப்பு தேடினேன். சில படங்களில் நடிக்கவும் செய்தேன். ஒரு படத்தில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது.

அந்த படத்துக்காக என்னை கவர்ச்சியாக படம் எடுத்தனர். குட்டை பாவாடையை அணிய வைத்து புகைப்படம் எடுத்தார்கள். அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. ஆனாலும் வற்புறுத்தி படம் பிடித்தார்கள்.

இதுபற்றி கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள்.’’ என்றார். இந்த புகார் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions