மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் - ஹன்சிகா

Bookmark and Share

மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் - ஹன்சிகா

'எங்கேயும் காதல்', 'ரோமியோ ஜூலியட்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹன்சிகா-ஜெயம் ரவி இணைந்து நடித்திருக்கும் 'போகன்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து இருக்கிறார். அந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நானும் ஜெயம்ரவியும் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ரசிகர்களுக்கும் எங்களை பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘போகன்’ படம் வித்தியாசமானது. அரவிந்த்சாமியுடன் முதல் முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படக்குழு மிகவும் ஜாலியானது.

தமிழ் ரசிகர்கள் மிகவும் சிறந்தவர்கள். திறமையானவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள். புதுமுகங்களை வரவேற்பார்கள். மிகவும் நல்லவர்கள். இதுபோன்ற ரசிகர்களை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. அவர்கள் விரும்புகிற நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். 

இப்போது வரும் புதுமுகங்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். புதுமுகங்கள் அதிகமாக வருவதால் கவலை இல்லை. போட்டி இருந்தால்தான் திறமையை வளர்க்க முடியும். ரசிகர்கள் பாராட்டும் வகையில் வித்தியாசமாக நடிக்க வேண்டும். ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள். சிறிது தாமதம் ஆனாலும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions