பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்: நடிகை ஹன்சிகா

Bookmark and Share

பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்: நடிகை ஹன்சிகா

ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. தற்போது இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். வருகிற 8-ந் தேதி, ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுவதையொட்டி ஒரு பெண்ணாக பிறந்ததற்காக தான் மகிழ்ச்சியடைவதாக ஹன்சிகா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு பெண்ணாக பிறந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தான் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். சமுதாயத்தை மாற்றி அமைப்பதில் உறுதியாக நிற்பவர்கள், பெண்கள் தான். பெண்களால் தான் ஒரு உயிரை கொண்டு வர முடியும்.

அதற்காக, ஒட்டுமொத்த பெண்களும் பெருமைப்படலாம். பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட எதுவும் இல்லை. நான், பயந்த சுபாவம் அல்ல. துணிச்சலாக இருக்க வேண்டிய விஷயங்களில் துணிச்சலாகவும், பொறுமையாக இருக்க வேண்டிய விஷயங்களில் பொறுமையாகவும் இருக்கிறேன். முதுகில் குத்துபவர்களுக்கு பயப்படுவேன்.

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கும் பயப்படுவேன். எனக்கு பிடித்த பெண் என்னுடைய அம்மா தான். நான், ஒரு பிரபல நடிகையாக இருப்பதற்கு அம்மா தான் காரணம். எங்க அண்ணன் பிரசாந்த் மும்பையில் உள்ள ஒரு மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பதற்கும் அம்மா தான் காரணம்.

எங்கள் இரண்டு பேரையும் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்தவர், அம்மாதான். இன்று நாங்கள் ஒரு அந்தஸ்தில் இருப்பதற்கும் அம்மாவே காரணம். பெண்களுக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி நடந்து கொள்வதே பெண்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவைதான். ஒரு பெண் வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், சமுதாயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமுதாயத்துக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிறேன். அது, பெண்களால் மட்டுமே முடியும். பொதுவாக பெண்களை மதிக்கும் ஆண்களை எனக்கு பிடிக்கும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர்களை பிடிக்கும்.

பெண்களை அடிமைகளாக நடத்தும் ஆண்களை பிடிக்காது. ஆண்களின் தன்னம்பிக்கை பிடிக்கும். நம்மால் தான் முடியும் என்ற ஆண்களின் கர்வம் பிடிக்காது. வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இல்லாத பெயரும், புகழும் நடிகைகளுக்கு கிடைப்பதை சாதகமாக கருதுகிறேன். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சில சமயங்களில் பாதிக்கப்படுவதை பாதகமாக கருதுகிறேன்.

ஒரு பிரபலம் என்பதால், அதை சகித்துக்கொண்டுதான் போக வேண்டும். எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும். அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ‘ஜிம்.’ அதன்பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன். இந்த வாழ்க்கை போதும்.
அரசியலுக்கு வந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மும்பை அருகில் உள்ள வாடாவில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் இல்லம் கட்டி வருகிறேன். சினிமாவில் நடித்து கிடைக்கும் சம்பளத்தில் ஆதரவற்றோரையும், முதியோரையும் கவனித்துக் கொள்வது, நிம்மதி அளிக்கிறது. 


Post your comment

Related News
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா
சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions