ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்!

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்!

தற்போது ஹன்சிகாவின் கைவசம் பல படங்கள் இருப்பது போன்று தெரிந்தாலும் அதில் வாலு, உயிரே உயிரே, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார்.

அதையடுத்து, விஜய்யுடன் புலியில் நடித்து வருபவர், அதற்கடுத்து உதயநிதியுடன் இதயம் முரளியில் நடிக்கிறார். மற்றபடி அவருக்கு பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. காரணம், தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டிருந்த, காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசன், தமன்னா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் கோலிவுட்டில் கால்பதித்திருப்பதால், ஹன்சிகாவுக்கு வரவேண்டிய சில படங்கள் கைமாறி விட்டன.

அதனால், விரைவில் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டு விடுமோ என்கிற பயம் அவருக்கு அதிகரித்து விட்டது. ஆக, புலிக்கு முன்புவரை சில வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் நடிக்க மறுத்து வந்த ஹன்சிகா, இப்போது அந்த படங்களின் இயக்குனர்களுக்கு தூது விட்டு, தான் நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.

அது மட்டுமின்றி, படுகவர்ச்சியாக தன்னை நடிக்க சொன்னதற்காக சில தெலுங்குப்பட தயாரிப்பாளர்களின் அழைப்பை நிராகரித்து வந்த ஹன்சிகா, தற்போது அவர்களை வலிய தேடிச்சென்று சான்ஸ் தருமாறு அன்புத்தொல்லை செய்து கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions