
கோலிவுட்டுக்கு வந்தபோது தான் கமிட்டாகும் படங்கள் பற்றிய அனைத்து முடிவுகளையும் தனது அம்மாவிடம் கேட்டே முடிவு செய்து வந்தார் ஹன்சிகா. பின்னர் அவரது அம்மா மும்பைக்கு சென்றுவிட அண்ணனின் பராமரிப்புடன் சென்னையில் முகாமிட்டு நடித்து வருகிறார்.
ஆனால் அம்மா கைப்பட படங்களுக்கான அட்வான்ஸை வாங்கியபோது கிடைத்து வந்த வெற்றி இப்போது இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஹன்சிகா, அம்மாதான் தனக்கு ராசி என்கிற முடிவுக்கு வந்துள்ளார்.
அதனால் இப்போது புதிதாக எந்த படங்களுக்கு கமிட்டானாலும் அதற்கான அட்வான்சை வாங்குவதற்கு முன்பு அம்மாவை மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைத்து அவர் கையினால் அட்வான்ஸ் வாங்குகிறார் ஹன்சிகா.
அதன்காரணமாக சமீபகாலமாக தனக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, தற்போது நடித்தது வரும் படங்களுக்கு பிறகு மாறி விடும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறர். அதனால் விஜய்யுடன் நடித்து வரும் புலி படமே தனது புதிய வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
Post your comment