ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்!

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்!

தமிழில், மாப்பிள்ளை படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்த இப்போது வரை ஹன்சிகாவின் அழகை அவர் சம்பந்தப்பட்ட மேடைகளில் புகழ்ந்து பேசியே வருகின்றனர். அவரது சமகாலத்து நடிகைகள் பலர் அழகானவர்களாக இருந்தும்கூட, ஹன்சிகாவின் பளிச்சென்ற கலர் அவருக்கு பெரிய ப்ளசாக அமைந்திருக்கிறது. அதேபோல், ரசிகர்களும் அவரது அழகை இணையதளங்களில் பக்கம் பக்கமாக வர்ணித்து ஹன்சிகாவை திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.

தற்போது அவர் நாயகியாக நடித்து வெளியாகயிருக்கும் படங்களின் இயக்குனர்கள்கூட ஹன்சிகா போன்று ஒரு அழகி இல்லை என்று அடித்து சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த நிலையில், சமீபத்தில் ஒரு அவுட்டோருக்கு சென்ற இடத்தில், அய்யே... இதுவா ஹன்சிகா -என்று அவரைப்பார்த்த ஒரு ரசிகர் முகம் சுழித்து விட்டாராம். இந்த வாசகம் ஹன்சிகாவின் காதில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்து விட்டாராம்.

இதற்கு முக்கிய காரணம், சினிமாவில் வண்ண உடையில் மேக்கப்பில் ஜொலிக்கும் ஹன்சிகா அன்றைய தினம், ஒரு சாதாரணமான வடஇந்திய உடையணிந்து சென்றாராம். அதோடு பெரிய அளவில் மேக்கப், சிகை அலங்காரம் செய்து கொள்ளாமல் சென்றிருந்தாராம்.  அதைப்பாத்துதான் அந்த ரசிகர் மிரண்டு போய் அப்படி சொல்லி விட்டதாக பின்னர் அவரைச்சார்ந்தவர்கள் ஹன்சிகாவிடம் சொன்னார்களாம்.

அதையடுத்து, இனிமேல் பொதுஇடங்களுக்கும் சினிமாவில் நடிப்பது போன்று தன்னை அலங்கரித்தபடி, தென்னிந்திய மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து செல்லவும் முடிவு எடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions