குழந்தைகளுடன் இருப்பது எனக்கு தனி இன்பம்- ஹன்சிகா

Bookmark and Share

குழந்தைகளுடன் இருப்பது எனக்கு தனி இன்பம்- ஹன்சிகா

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாna  ஹன்சிகாவிற்கு குழந்தைகள்தான் மிகவும் பிடிக்குமாம். இதுகுறித்து அவர், “ திரை உலகில் எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன்.

‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம். அவர் மிகவும் அன்புடன் பழகுகிறார். சுந்தர்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். 

தமிழ் ரசிகர்கள் மனதில் நான் இடம் பிடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. விதவிதமான வேடங்களில் நடித்து இன்னும் நல்ல பெயருடன் ரசிகர்களிடம் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும். நல்ல வேடங்களில் நடித்து அதை ரசிகர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. 

நான் தத்து எடுத்து வளர்க்கும் 31 குழந்தைகளை பார்க்கும்போது தான் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மன நிறைவு கிடைக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். இதற்காகவே அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். குழந்தைகளுடன் இருப்பது எனக்கு தனி இன்பம்” என்றார்.

 


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions