டபுள் சம்பளம் கேட்கும் ஹன்சிகா!

Bookmark and Share

டபுள் சம்பளம் கேட்கும் ஹன்சிகா!

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு, அங்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், தென்னிந்தியாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் சென்றது.

அப்போது தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஆரம்பத்திலேயே அவர் முன்னணி ஹீரோயின்கள் போன்று சம்பளம் கேட்டதாக அப்போது கூறப்பட்டது. அதேபோல் அதையடுத்து மாப்பிள்ளை படத்துக்காக தமிழுக்கு வந்தபோது கிட்டத்தட்ட தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்ததால் முன்னணி நடிகை போன்று அவருக்கு சம்பளம் கொடுத்தனர்.

அதோடு வந்த வேகத்திலேயே அவர் தனுஷ், ஜெயம்ரவி, விஜய் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்ததால் படத்துக்குப்படம் அவரது படக்கூலி எகிறிக்கொண்டேயிருந்தது.

ஆனபோதும், சிம்புவுடன் காதலில் விழுந்தபோது, ஹன்சிகாவின் மவுசு இனிமேல் இறங்கி விடும் என்று அதையடுத்து புக் பண்ணியவர்கள் அவரது சம்பளத்தை குறைத்தனர்.

ஆனால், சிம்புவுடனான காதல் சில மாதங்களில் காற்றில் பறந்ததால், மறுபடியும் தனது சம்பளத்தை உயர்த்தத் தொடங்கிய ஹன்சிகா, இப்போது மறுபடியும் ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம்.

அந்த வகையில், முன்னணி ஹீரோக்கள் இல்லாமல் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படவாய்ப்புகள் என்றால் டபுள் சம்பளம் கேட்கிறாராம் ஹன்சிகா. அதேசமயம், அந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கரன்சியை அள்ளிக்கொடுக்கும் பட்சத்தில், கால்சீட்டையும், கவர்ச்சியையும் தானும் அள்ளிக்கொடுக்க தயங்குவதில்லையாம் ஹன்சிகா.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions