ஹன்சிகா இல்லாத அரண்மனையா..?

Bookmark and Share

ஹன்சிகா இல்லாத அரண்மனையா..?

தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி ஹீரோயினாக மட்டுமல்லாமல் வெற்றிகரமான ஹீரோயினாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா.

விரைவில் இவர் நடித்துள்ள  வாலு, ரோமியோ ஜுலியட் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அடுத்ததாக விஜய் ஜோடியாக நடிக்கும்  புலி புதுமுகம் சித்துவுடன் நடிக்கும்  உயிரே உயிரே ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இவற்றிற்கடுத்து சுந்தர் .சி இயக்க உள்ள  அரண்மனை 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஏற்கெனவே சித்தார்த், த்ரிஷா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தற்போது ஹன்சிகாவும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

இதன் மூலம் சுந்தர்.சியுடன் நான்காவது நான்காவது கூட்டணி சேர்கிறார் ஹன்சிகா. இதற்கு முன் “அரண்மனை, ஆம்பள, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களில் அவர் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார்.

இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,“என்னுடைய ஃபேவரிட் இயக்குனரின் படத்தில் நான்காவது முறையாக நடிக்க உள்ளேன்,” என்றார். அதற்கு பதிலளித்த குஷ்பு,ஹன்சிகா இல்லாமல் அரண்மனை முழுமையாக இருக்காது டியர்,” என்றார்.

அரண்மனை 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆன்ட்ரியா, லட்சுமி ராய் போன்றோரும் நடிப்பார்களா என்பதும் தெரியவில்லை.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions