சம்பளம் பற்றி கவலையில்லை - ஹன்சிகா

Bookmark and Share

சம்பளம் பற்றி கவலையில்லை - ஹன்சிகா

தமிழில் தற்போது அதிகப் படங்களை கையில் வைத்திருக்கும் இரண்டாவது நடிகை ஹன்சிகா மட்டுமே. இவர் நாயகியாக நடிக்க அடுத்தடுத்து  வாலு, ரோமியோ ஜுலியட், உயிரே உயிரே, புலி, இதயம் முரளி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

கடந்த ஆண்டிலும் அதிகப் படங்களில் நடித்த ஒரு நாயகியாக ஹன்சிகா இருந்தார்.

கிளாமராக நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்பதாலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இவரின் சம்பளம் சுமார் ஒரு கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஹன்சிகா பணத்தைப் பற்றிக் கவலைப்படவே மாட்டாராம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பணம் சம்பாதிப்பதைப் பற்றி அவர் கூறியதாவது, “அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

ஆனால், எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல. பணத்தின் மீது நான் அதிகமாக ஆசைப்படுவதும் கிடையாது.

எனக்குத் தேவையானவற்றை என்னுடைய அம்மா கவனித்துக் கொள்கிறார். எனக்கு என்ன தேவையோ அதை என் அம்மா கொடுத்து விடுவார். அளவுக்கதிகமாக அவரிடம் என்றுமே நான் கேட்பது கிடையாது.

நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கவலைப்பட்டதே கிடையாது. ஏதாவது ஒரு லட்சியம்னு நான வாழ்க்கையில வச்சிக்கிட்டதே கிடையாது, அதனாலதான் மகிழ்ச்சியா இருக்கிறேன்,” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions