பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்: ஹன்சிகா பேட்டி

Bookmark and Share

பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்: ஹன்சிகா பேட்டி

ஜீவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘போக்கிரி ராஜா.’ இதில் சிபிராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா டைரக்டு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து ஹன்சிகா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

‘‘போக்கிரி ராஜா படத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பெண்ணாக வருகிறேன். பொதுச்சேவையில் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்த விஷயத்தில் எனக்கு தூண்டுதலாக இருப்பவர், பிரதமர் நரேந்திர மோடி. அவரது தூய்மை இந்தியா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்த படத்தில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று உழைக்கும் ஒரு பெண் வேடத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜீவா எனக்கு நண்பராக இருக்கிறார். அவருடன் நடிக்க இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு காட்சியில் நான் நடிக்கப்போவதாக தகவல் பரவி உள்ளது. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. ‘அரண்மனை-2’ படத்தில் நான் நடித்துள்ள பேய் வேடத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன். அஜித்குமார், விக்ரம் போன்றோருடன் இதுவரை நடிக்கவில்லை. 

வாய்ப்பு வந்தால் அவர்களுடன் நடிப்பேன். நான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது சக மாணவனுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பு தொழிலை மட்டுமே காதலிக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். 

இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்காக ஒரு இல்லம் கட்ட முயற்சித்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும். படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளேன்.

அந்த ஓவியங்களை விரைவில் சென்னையில் கண்காட்சியாக வைத்து ஏலம் விட திட்டமிட்டுள்ளேன். அதில் வசூலாகும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடுவேன்.’’ 

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

நடிகர் ஜீவா கூறும்போது, ‘‘போக்கிரி ராஜா சிறந்த பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. நகைச்சுவையும் இருக்கும். காட்சிகளும் புதுசாக இருக்கும். நான் போக்கிரிதனமான துறுதுறு இளைஞனாக வருகிறேன். படப்பிடிப்பில் எனக்கும் சிபிராஜுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என்றார்.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions