தமிழைக் கற்றுக் கொள்ளாத ஹன்சிகா

Bookmark and Share

தமிழைக் கற்றுக் கொள்ளாத ஹன்சிகா

தனுஷ் நடித்த  மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக 2011ம் ஆண்டு அறிமுகமானவர் ஹன்சிகா. அதன் பின் “எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மீகாமன், ஆம்பள,” உள்ளிட்ட 12 படங்களில் நாயகியாக நடித்தார்.

தமிழில் அவருடைய 13வது படமாக  ரோமியோ ஜுலியட் இன்று வெளியாகி உள்ளது. அடுத்து  வாலு, புலி, உயிரே உயிரே உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன. இன்னும் சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இருந்தாலும் இத்தனை வருடங்கள் கழித்தும், இத்தனை படங்களில் நடித்த பிறகும் ஹன்சிகா இன்னும் தமிழ் பேசக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். நேற்று நடைபெற்ற ரோமியோ ஜுலியட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட அவருக்காகத்தான் நடந்தது.

எந்தத் தொலைக்காட்சிக்கும் பேட்டி தராமல், பத்திரிகையளார்கள் சந்தித்தாலும் படத்தைப் பற்றி மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்ற கண்டிஷன் போட்டு நேற்யை நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

வந்தவர், எல்லோருக்கும் நன்றி, வணக்கம் என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் தமிழில் பேசிவிட்டு, மேலும் நாலு வரிகளில் ஆங்கிலத்தில் பேசி அவருடைய கடமையை முடித்துக் கொண்டார்.

தமன்னா சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் சீக்கிரமே தமிழ் பேசக் கற்றுக் கொண்டார். சமீபத்தில் நடந்த 'பாகுபலி' டிரைலர் வெளியீட்டில் கூட நான் தமிழில் பேசி நீண்ட நாட்களாகி விட்டது என்று சொல்லிவிட்டு, தமிழில் மட்டுமே பேசினார்.

தமன்னாவைப் போன்ற நடிகைகளைப் பார்த்து ஹன்சிகா இது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். 


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions