ஆண்களின் கண்களைப் பார்த்து சொல்ல முடியாது - ஹன்சிகா

Bookmark and Share

ஆண்களின் கண்களைப் பார்த்து சொல்ல முடியாது - ஹன்சிகா

வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து போகிறவர்கள்தான் இந்த உலகத்தில் அதிகம். பலாப்பழம் வெளியில் பார்ப்பதற்கு முள்ளாக இருந்தாலும் உள்ளே தேனினும் இனிய பலாச்சுளை இருக்கும்.

மாம்பழம் வெளியில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உள்ளே பூச்சிகள் இருக்கும். அப்படித்தான் தோற்றத்தைப் பார்த்து முடிவெடுக்கும் விஷயமும் கூட. பொதுவாக பெண்களின் கண்களைப் பார்த்து எதையும் முடிவு செய்ய முடியாது என்று சொல்வார்கள்.

ஆனால், ஆண்களின் கண்களைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்ல முடியாது என ஹன்சிகா சொல்கிறார். 'ரோமியோ ஜுலியட்' படத்தில் ஒரு இனிமையான காதலியாக நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்.

என்னுடைய வயதிற்கேற்றபடியான ஜாலியான சுவாரசியமான கதாபாத்திரங்கள் தமிழில் கிடைக்கின்றன. நான் இதுவரை எத்தனையோ ரோமியோக்களை சந்தித்துள்ளேன்.

ஆனால், உண்மையான ரோமியோ யார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆண்களின் கண்களைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்ல முடியாது,” என ஹன்சிகா சொல்கிறார்.

அழகான பெண்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வதுதானே ஆண்களின் பழக்கம். ஆனால், இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்...?


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions