வளர்ப்பு குழந்தைக்கு உடல் பாதிப்பு : ஷூட்டிங்கிற்கு கட் அடிக்கிறார் ஹன்சிகா

Bookmark and Share

வளர்ப்பு குழந்தைக்கு உடல் பாதிப்பு : ஷூட்டிங்கிற்கு கட் அடிக்கிறார் ஹன்சிகா

ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். முதியோர்கள் சிலரையும் பராமரித்து வருகிறார். இவர்களுக்காக ஆதரவற்றோர் இல்லம் கட்ட மும்பையில் இடம் வாங்கி இருக்கிறார்.

இது பற்றி அவரது தரப்பில் கூறும்போது,

‘ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு மீண்டும் உதயநிதியுடன் ஹன்சிகா இணைந்து இதயம் முரளி படத்தில் நடிக்கிறார். கல்லூரி மாணவியாக நடிக்கும் இப்படத்தை அஹமத் இயக்குகிறார்.

இதற்கிடையில் விஜய்யுடன் ' புலி'  படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்தார்.
மேலும் 2 பாடல் காட்சிகளில் நடிக்கிறார்.

அதில் ஒன்று வெளிநாட்டில் படமாகிறது. முதன்முறையாக இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ஹன்சிகா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்து வருகிறார். தவிர இன்னும் பல படங்களில் நடிக்கிறார்.

இதற்கிடையில் ஹன்சிகா படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார். அவர் வளர்த்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேரில் 2 குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ள இந்த ஓய்வு எடுக்கிறார்‘ என்றனர்.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions