டால்பினுக்கு முத்தம் கொடுத்த ஹன்சிகா

Bookmark and Share

டால்பினுக்கு முத்தம் கொடுத்த ஹன்சிகா

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஹன்சிகா. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார்.

கிடைக்கும் ஓரிரு நாள் ஓய்வில் கூட மும்பைக்குப் பறந்து விடுவார். அவர் ஆதரவளித்து வளர்க்கும் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிப்பார். தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஹன்சிவாவிற்கு தற்போது மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் தனது தோழிகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.

எந்த நாடுகளுக்கெல்லாம் செல்கிறார் என்பதைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியில் சொல்லாத ஹன்சிகா அவ்வப்போது சுற்றுப் பயண புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒரு புகைப்படத்தில் டால்பின் ஒன்றிற்கு அவர் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “என்னுடைய சுற்றுப்பயணத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம். டால்பின் ஒன்றிற்கு நான் முத்தமிட்டது நினைவில் வைத்துக் கொள்ளக் கூட மிகப் பெரிய அனுபவம்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions