இந்த ஆண்டு 5 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ஹன்சிகா

Bookmark and Share

இந்த ஆண்டு 5 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது அவரது வழக்கம். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஆனால் வருகிற பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு விபரம் தெரியாத காலத்திலேயே என் பெயரில் என் அம்மா குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்.

சினிமாவிற்கு வந்து நிறைய சம்பாதித்த பிறகு ஆரம்பித்த பணியல்ல இது. அதற்கு முன்பே தொடங்கியது. ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல் வேறு பணிக்கு சென்றிருந்தாலும் இதனை செய்திருப்பேன். எனது குழந்தைகளுக்காக மும்பை புறநகரில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன்.

அதில் அவர்களுக்காக ஒரு இல்லம் கட்டப்போகிறேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறேன். எனது இந்த பணியை நான் விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. ஆனால் மீடியாக்கள் தோண்டி துருவி கண்டுபிடித்து வெளியிட்டு விடுகிறார்கள்.

அவர்கள் கேட்கும்போது மறைக்கத் தோணவில்லை. அதனால் சொல்ல வேண்டியது இருக்கிறது. என்கிறார் ஹன்சிகா.

 


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions