பாசக்கார ஹன்சிகா!

Bookmark and Share

பாசக்கார ஹன்சிகா!

மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அனாதை இல்லம் நடத்தி வரும் ஹன்சிகா, அந்த குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை கொடுக்க தனது நெருக்கமான உறவினர்களையே நியமித்திருக்கிறாராம்.

இருப்பினும், சில முக்கிய விசயங்களை தானே முன்நின்று செய்து கொடுக்கிறாராம். அந்தவகையில், அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அதை அங்கிருப்பவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று அவர் அலட்சியமாக எடுத்துக்கொள்வதில்லையாம்.

இங்கே படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதும் தனது சொந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி பீல் பண்ணுவாரோ அதேபோன்று பீல் பண்ணி அடிக்கடி நலம் விசாரித்துக்கொண்டே இருக்கிறாராம்.

மேலும், சில குழந்தைகளின் உடல்நிலை எதிர்பார்த்தபடி குணமடையாமல் இழுத்தடித்தால் அவர்களை காண தான் நேரிலேயே சென்று பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று குணப்படுத்துகிறாராம்.

அந்த வகையில், குழந்தைகள் விசயத்தில் எவ்வளவு செலவானாலும் அதை நினைத்து ஹன்சிகா கவலைப்படுவதே இல்லையாம். அவர்களின் நலம்தான் எனக்கு முக்கியம் என்கிறாராம். ஹன்சிகாவின் இந்த மனநிலையை அறிந்த கோலிவுட் நபர்கள் அவரை ரொம்ப பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions