சாலையோரத்தில் தங்கியிருந்தவர்களுக்கு உதவி செய்த ஹன்சிகா!

Bookmark and Share

சாலையோரத்தில் தங்கியிருந்தவர்களுக்கு உதவி செய்த ஹன்சிகா!

ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து ‘போகன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு சமூக சேவைகளிலும் ஹன்சிகா ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா, இரவு நேரத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு போர்வை மற்றும் துணி மணிகளை கொடுப்பது போலவும். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குவது போலவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவே நேரில் களத்தில் இறங்கி இந்த உதவிகளை செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Post your comment





Related News
தொடர் தோல்விகளால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு!
புலி பாணியில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா!
ஜீவாவின் போக்கிரி ராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு
படப்பிடிப்பில் ஜீவா – சிபிராஜ் மோதல்
நாளை முதல் ரசிகர்களை மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2!
சூர்யாவுடன் ஜோடிசேரும் அனுஷ்கா - ஹன்ஸிகா!
ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து சில்மிஷம் செய்து காயப்படுத்திய‌ கோவை ரசிகர்கள்
சூர்யாக்கு ஜோடி மகிழ்ச்சியில் ஹன்சிகா
20 குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாட ஹன்சிகா திட்டம் !
அரசியல் ஆர்வம் உள்ளது :ஹன்சிகா அதிரடி !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions