ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!

Bookmark and Share

ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!

ஹன்சிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குலேபகாவலி. இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்தே 6மாதங்கள் ஆன நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் வேறு எப்படமும் தற்சமயம் திரைக்கு வரும் நிலையில் இல்லை.

ஆகையால் இன்னும் சில மாதங்களுக்கு ஹன்சிகாவை திரையில் பார்க்க முடியாது என்றே தெரிகிறது. இந்த இடைவெளிக்கு காரணமாக வேறு எந்த நடிகையையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதற்கெல்லாம் காரணம் ஹன்சிகா தான்.

அவரிடம் போன மாதம் மட்டும் 30 கதைகள் வந்துள்ளன. ஆனால் அவை அனைத்தையும் பப்ளியான வேடங்களாகவே உள்ளது என்று ஒதுக்கியுள்ளார். இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடித்து நடித்து அலுத்துவிட்டது.

இனிமேல் பர்பாமென்ஸ் ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி, வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனாலேயே ஹன்சிகாவிடம் தற்போது படங்கள் குறைவாகவே உள்ளன.

விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 மற்றும் தெலுங்கில் ஒரு படம் என மொத்தம் 3 படங்களே ஹன்சிகா கையில் உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions