மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு! பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Bookmark and Share

மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு! பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மனிதன்’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கும் கேளிக்கை வரி விலக்கு கேட்டு, அப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. 

இந்த படத்தை பார்வையிட 5 நபர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு, படத்தை பார்த்து கொடுத்த அறிக்கையில், ‘மனிதன்’ என்பது தமிழ் சொல் அல்ல. ‘மாந்தன்’, ‘மாந்தர்’ என்பதுதான் தமிழ் சொல் என்று கூறியிருந்தது.

இதனடிப்படையில், கடந்த ஏப்ரல் 29-ந் தேதி ‘மனிதன்’ படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுத்து தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலர் அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் ‘மனிதன்’ படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஞ்சுமி ஸ்ரீராம், சி.முருகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions