ஹன்சிகாவை பீல் பண்ண வைத்த நயன்தாரா!

Bookmark and Share

ஹன்சிகாவை பீல் பண்ண வைத்த நயன்தாரா!

சிம்புவை சில மாதங்கள் மட்டுமே காதலித்த நயன்தாரா, அதன்பிறகு அவரை விட்டு பிரிந்தவர் சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து நின்றார். அதிலும் பில்லா படத்துக்கு பிறகு அவருக்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

அதனால் பின்னர் ரசிகர்களை கருத்தில் கொண்டு படத்துக்கு ஒரு பாடலிலாவது படுகவர்ச்சியாக நடிப்பதை தனது பாணியாக்கிக்கொண்டார் நயன்தாரா. அப்படி நடித்து வந்தவர் பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளயிருந்தபோது படங்களை குறைத்துக்கொண்டதால் அவரது மார்க்கெட் சரிந்தது.

ஆனால், அதையடுத்து அவரை விட்டு நயன்தாரா பிரிந்து விட்டார் என்றதும் படங்களுக்கு அவரை மாறி மாறி புக் பண்ணினார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையானார் நயன்தாரா.

அந்தவகையில், இப்போது இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றியிருக்கும் நயன்தாராவின் படக்கூலியும் 2 கோடியில் இருந்து 3 கோடி அளவுக்கு எகிறி நிற்கிறது.

இதைப்பார்த்து மற்ற நடிகைகளை விட ஹன்சிகாதான் ரொம்பவே பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். காரணம், எப்படி நயன்தாரா காதலில் விழுந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தாரோ, அதேபோல்தான் ஹன்சிகாவும் சிம்புவுடன் காதலில் விழுந்து சில மாதங்களிலேயே தெளிவு பெற்று நடிக்க வந்தார்.

இந்த செய்தியை அவர் கோலிவுட்டுக்கு அறிவித்தபோது சில படங்கள் வேகவேகமாக புக்கானபோதும் பின்னர் படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் நயன்தாராவுக்கு ஒர்க்அவுட்டான காதல் தோல்வி ராசி நமக்கு செட்டாகவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions