ஹன்சிகா அழகா, நித்யா மேனன் அழகா: பாடலாசிரியர், நடிகை மோதல்

Bookmark and Share

ஹன்சிகா அழகா, நித்யா மேனன் அழகா: பாடலாசிரியர், நடிகை மோதல்

ஜெயப்பிரதா தயாரிப்பில் அவரது மகன் சித்து நடிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பாடலாசிரியர் விவேகா பேசும்போது: இயக்குனர் ராஜசேகர் என் நீண்ட நாள் நண்பர்.

இந்த படத்துக்கு பாட்டு எழுதும்போது ஹீரோயினை வர்ணித்து பாட்டு எழுதிக் கேட்டார். நான் பொதுவாக வர்ணித்து ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதை படித்த அவர் என் படத்தில் நடிப்பது நித்யா மேனன் இல்லை.

பேரழகி ஹன்சிகா என்றார். அதன் பிறகுதான் "உலகில் இதுவரை பிறந்த பெண்களில் இவளே அழகி... உலகில் உள்ள பூக்கெளுக்கெல்லாம் இவளே தலைவி..." என்று எழுதிக் கொடுத்தேன் என்றார்.

இதன் பிறகு பேச வந்த நடிகை ஸ்ரீப்ரியா... "பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாதான் அழகி, நித்யா மேனன் அழகில்லை என்கிற தொணியில் பேசினார். ஏன் நித்யா மேனன் அழகானவர் இல்லையா? அவரும் அழகிதான்.

நிறம் சிவப்பாக இருந்தால்தான் அழகு என்பதில்லை" என்றார். ஸ்ரீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நித்யா மேனன்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions