ரித்திகா சிங் மீது கடும் கோபத்தில் ஹன்சிகா!

Bookmark and Share

ரித்திகா சிங் மீது கடும் கோபத்தில் ஹன்சிகா!

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் சிவலிங்கா. இப்படம் இதே பெயரில் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் நாயகியாக இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்கும் நடிக்க உள்ளார்கள். மேலும் வடிவேலு, சக்திவேல் வாசு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

முதலில் இப்படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயினாக நடிக்கவேண்டி இருந்ததாம். ஆனால் பின்னர் ரித்திகா சிங்கை யாரோ சிபாரிசு செய்து அவரையே படத்தில் புக் செய்துவிட்டார்களாம். இதனால் ரித்திகா மீது ஹன்சிகா கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரில் தொடங்குகிறது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions