ஹன்சிகா எதிர்பார்க்கும் ரோமியோ ஜூலியட்!

Bookmark and Share

ஹன்சிகா எதிர்பார்க்கும் ரோமியோ ஜூலியட்!

மான்கராத்தே, அரண்மனை படங்களின் வெற்றிக்குப்பிறகு ஹன்சிகா நடித்த ஆம்பள, மீகாமன் படங்கள் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.

இதற்கு முன்பு, ஜெயம்ரவியுடன் நடித்த எங்கேயும் காதல் படத்தை விட இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறும் ஹன்சிகாவுக்கு இப்படத்தில் பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய காட்சிகள் அதிகமாம்.

அதோடு, இதே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பூனம்பாஜ்வாவுடன் எதிரும் புதிருமான காட்சிகளும் அவருக்கு நிறைய உள்ளதாம். அதனால், முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் தனது திறமையை அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகவும் சொல்லிக்கொள்ளும் ஹன்சிகா, தற்போது ரோமியோ ஜூலியட் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த படம் தனக்கு வெற்றியாக அமைந்து, சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறி வருவதோடு, அதையடுத்து விஜய்யின் புலி தனக்கு இன்னும் பெரிய அளவிலான படங்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம்.

 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions