சொகுசு கார்கள் வாங்கிய ஹன்சிகா, சுருதிஹாசன், சமந்தா

Bookmark and Share

சொகுசு கார்கள் வாங்கிய ஹன்சிகா, சுருதிஹாசன், சமந்தா

கதாநாயகிகள் சினிமாவில் நடித்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அவர்களின் முதல் கனவாக இருப்பது சொந்தமாக வீடு, கார் வாங்குவது.
நிறைய நடிகைகள் சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் பல கோடி செலவில் சொந்த வீடு வாங்கி இருக்கிறார்கள். சாதாரண கார்களில் பயணித்த நடிகைகள் பலர் தற்போது ஆடம்பர கார்கள் வாங்கி உள்ளனர்.

நடிகை ஹன்சிகா, ‘பி.எம்.டபுள்யு 5 சீரிஸ் செடன்’ என்ற சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, “சிறு வயதிலேயே காரில் செல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. நடிகையாகி சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதை நிறைவேற்றிக்கொள்ள முடிவு எடுத்தேன். ரூ.58 லட்சம் செலவில் பி.எம்.டபுள்யு காரை வாங்கி இருக்கிறேன். எனக்கு ‘நேவி புளு’ கலர் மிகவும் பிடிக்கும் அந்த கலரில் கார் இருப்பு இல்லை என்றார்கள். இதற்காக பல மாதங்கள் காத்திருந்து அதே கலரில் காரை வாங்கி இருக்கிறேன்.

எனது அதிர்ஷ்ட எண் 9. இந்த பிரத்யேக நம்பரை வாங்குவதற்காகவும் நிறைய செலவு செய்து இருக்கிறேன். கார் வாங்கிய உடனே எனது அம்மாவையும், அண்ணனையும் காரில் உட்கார வைத்து அழைத்து சென்றேன். அவர்கள் பார்வையில் வளர்ந்த நான் இப்படி சொகுசு காரை வாங்கி அதில் உட்கார வைத்து அழைத்து சென்றதை அவர்களால் நம்பவே முடியவில்லை” என்றார்.கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து இருக்கிறார். கமல்ஹாசன் மகள் என்பதை விட தனது சொந்த காலில் நிற்பதையே அவர் விரும்புகிறார். எதற்காகவும் தந்தையிடம் உதவி கேட்பதில்லை. கார் விஷயத்திலும் அப்படித்தான். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் அவர் ரூ.1½ கோடி செலவில் ‘ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்’ காரை வாங்கி இருக்கிறார்.

“சொந்தமாக சொகுசு கார் வாங்க நீண்ட நாட்கள் ஆசைப்பட்டு இப்போதுதான் அது நிறைவேறி உள்ளது என்று அவர் கூறினார்.

நடிகை சமந்தா சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கு ஒதுக்குகிறார். ஆனாலும் அவருக்கும் சொகுசு கார் வாங்கும் ஆசை இருந்தது. தனக்கு பிடித்தமான ‘பி.எம்.டபுள்யு எக்ஸ் 5 சீரிஸ்’ காரை ரூ.76 லட்சம் செலவில் வாங்கி இருக்கிறார். அதிர்ஷ்ட எண் 9 ஐ கார் நம்பராக வாங்குவதற்கும் நிறைய செலவு செய்து இருக்கிறார். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions