ஸ்ருதிக்கும் ஹன்சிகாவுக்கும் சம பங்கு அளித்த சிம்புதேவன்

Bookmark and Share

ஸ்ருதிக்கும் ஹன்சிகாவுக்கும் சம பங்கு அளித்த சிம்புதேவன்

விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி கபூர். மேலும், நான் ஈ சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதால் யாருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு இயக்குனர் சிம்புதேவன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புலி’ படத்தில் ஸ்ருதியும், ஹன்சிகாவும் விஜய்க்கு ஜோடியாக சமமாக நடித்துள்ளனர். நான் அவர்களுக்கு இந்த படத்தின் கதையை கூறியபோது, அவர்களுடைய கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டனர். ‘அட்டக்கத்தி’ நந்திதாவும் இப்படத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றார்.

ஸ்ரீதேவி கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, ஸ்ரீதேவி இந்த படத்தில் மகாராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரும். மேலும், இந்த படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Post your comment





Related News
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions