நான்காவது முறையாக சுந்தர்.சி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

Bookmark and Share

நான்காவது முறையாக சுந்தர்.சி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஹன்சிகா. இந்தப் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. ‘அரண்மனை’ படத்தில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வணிக ரீதியில் வெற்றி கண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதில் சித்தார்த் நாயகனாகவும் திரிஷா நாயகியாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சுந்தர்.சி ஆஸ்தான நடிகையான ஹன்சிகா இப்படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியானது.

தற்போது இந்தப் படத்திலும் ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹன்சிகா நான்காவது முறையாக சுந்தர்.சி படத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது,

'நான்காவது முறையாக என் மனம் கவர்ந்த இயக்குனர் சுந்தர் சியுடன் இணைய உள்ளேன். மீண்டும் அரண்மனை, மிகப்பெரிய ஸ்டார் டீம்' என கூறியுள்ளார். இவருக்கு பதில் அளிக்கும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும் சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பு, 'நீ இல்லாமல் இப்படம் முழுமை அடையாது’ என்று கூறியிருக்கிறார். 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions